காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-28 14:34 GMT
புதுடெல்லி,

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் (வயது 70) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள வசந்தகுமாருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் மரணம் அடைந்தார். 

இரவு 7 மணியளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 10 முதல் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிந்தார்.  காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமாருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

எச்.வசந்தகுமாருடன் உரையாடியதில் தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறையை அறிந்தேன். வணிகம் மற்றும் சமூகசேவையில் எச்.வசந்தகுமாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

 தமிழகம் முழுவதும் முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை வசந்தகுமாரிடம் கண்டிருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்