இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைவு

இந்தியாவில் நடப்பு ஆண்டு சாலை விபத்துக்கள் 35 சதவிகிதம் குறைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-09-18 08:27 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் நடப்பு ஆண்டில் முதல் பாதியில் 1,60,000 விபத்துக்கள் நடைபெற்று இருப்பதாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 35 சதவிகிதம் இது குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கணிசமாக சாலை விபத்துக்களும் குறைந்து  உள்ளது தெரியவந்துள்ளது. விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்பு விகிதமும் 30 சதவிகிதம் குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்