ஜம்மு காஷ்மீரில் புதிதாக 1,218-பேருக்கு கொரோனா

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 1,218-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2020-09-25 16:19 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் புதிதாக 1,218-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு டிவிசனில் 642-பேரும் காஷ்மீர் டிவிசனில் 576-பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 69 ஆயிரத்து 832 ஆக உள்ளது.

தொற்று பாதிப்புடன் 19 ஆயிரத்து 170-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 49 ஆயிரத்து 557-பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இதுவரை கொரோனா தொற்றால் 1,105-பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி பாதிப்பு விவரம்


டெல்லியில் இன்று புதிதாக 3,827-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 59 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  தொற்று பாதிப்பில் இருந்து 4,601-பேர் ஒரே நாளில் மீண்ட நிலையில், 24 பேர் உயிரிழந்துள்ளனர்.  டெல்லியில் தொற்று பாதிப்புடன் 30 ஆயிரத்து  867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்