உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-25 17:22 GMT
புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கடந்த மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் ரெயில், பேருந்து மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்தடுத்த ஊரடங்கு கட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உள்நாட்டு விமானப்போக்குவரத்து துவங்கியது.

இந்நிலையில் இது குறித்து  மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப்சிங் புரி கூறியதாவது:-

மே.,25ம் தேதி முதல் இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணித்துள்ளனர். மொத்தம் 1 லட்சத்து 8 ஆயிரத்து 210 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

கொரோனா ஊரடங்கிற்கு முன்பிருந்த நிலையைப் போலவே வழக்கமான எண்ணிக்கையில் பயணிகள் விமானப் பயணம் செய்யத் துவங்கி உள்ளனர். மார்ச்., 25ல் நிறுத்தப்பட்ட விமானப் போக்குவரத்து மே 25க்குப் பிறகு படிப்படியாக விரிவு படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்