மேற்குவங்கத்தில் அக். 1 முதல் நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி

மேற்குவங்கத்தில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள் மற்றும் திறந்தவெளி திரையரங்குகளை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி அனுமதி அளித்துள்ளார்.

Update: 2020-09-27 10:16 GMT
கொல்கத்தா,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான்காம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்காம் கட்டத் தளர்வில் பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து, தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றிற்கு ஒருசில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் மேற்குவங்கத்திலும் முதல்வர் மம்தா பானர்ஜி தளர்வுகளை அறிவித்துள்ளார். பேருந்துகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றிற்கு தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போது திரையரங்குகளும் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்