மைசூர் தசரா பண்டிகை கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் - கர்நாடக அரசு வெளியீடு

மைசூர் தசரா பண்டிகை கொண்டாடுவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-10-09 15:08 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் அரண்மனையில் ஆண்டு தோறும் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். தசரா பண்டிகையின் போது 10 நாட்களும் மைசூர் அரண்மனையில் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக லட்சக்கணக்கில் மக்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக மைசூர் தசரா விழாவை கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்துள்ளது. அதன்படி விழா நடைபெறும் நாட்களான அக்டோபர் 17 முதல் 26 வரை மைசூர் அரண்மையில் தினமும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மைசூர் அரண்மனை பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பவும் கர்நாடக அரசு பரிந்துறை செய்துள்ளது.

மேலும் செய்திகள்