இந்தியாவில் 71 லட்சம் கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 706 பேர் மரணமடைந்து உள்ளனர்.

Update: 2020-10-13 04:58 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது.  எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே பாதிப்பு கட்டுப்படுத்தப்படும் என அரசு கூறியுள்ளது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 55,342 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.

கடந்த பல நாட்களாக 70 ஆயிரத்திற்கு மேல் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், இன்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது ஆறுதல் அளித்துள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71 லட்சத்து 75 ஆயிரத்து 881 ஆக உயர்ந்து உள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,38,729 ஆக உள்ளது.  இதேபோன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 62,27,296 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு 706 பேர் மரணமடைந்து உள்ளனர்.  இதனால், கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 856 ஆக உயர்வடைந்து உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்