நாட்டின் நலனுக்காக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன - பிரதமர் மோடி

தேசிய நலனுக்கு எதிராக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2020-10-23 09:57 GMT
பாட்னா,

பீகார் மாநிலத்தில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்க உள்ளது. நவம்பர் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதற்கான முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.  பாகல்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என உத்தரவிட்ட போது எதிர்க்கட்சிகள் எதிராக நின்றனர். தேசிய நலனுக்கு எதிராக ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் அவை எல்லாவற்றையும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றனர். 

தங்கள் குடும்ப நலனைப் பற்றியே அவர்கள் சிந்திக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர். பீகாரை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்து செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டியது அவசியம்.

பீகார் மாநிலம் வளர்ச்சியை நோக்கிச் செல்ல நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

மேலும் செய்திகள்