கேரளாவில் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல்

போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் ஒன்றை பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு இயற்றி உள்ளது.

Update: 2020-11-21 23:26 GMT
திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான சைபர் தாக்குதல்களை தடுக்க போலீஸ் சட்டத்தில் திருத்தம் செய்து அவசர சட்டம் ஒன்றை பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு இயற்றி உள்ளது.

இந்த சட்டம், போலீசாருக்கு கூடுதல் அதிகாரங்களை தருவதோடு, கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் தனது ஒப்புதலை வழங்கினார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்