ஜனவரி 31ம் தேதி வரை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் விடுப்புகள் ரத்து - உத்திரபிரதேச அரசு அறிவிப்பு

ஜனவரி 31ம் தேதி வரை அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் விடுப்பினை ரத்து செய்வதாக உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.;

Update:2020-12-16 15:42 IST
கோப்புப்படம்
லக்னோ, 

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை விரைவில் மாநிலம் முழுவதும் தொடங்கப்போவதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா நோய்த்தடுப்புத் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும்நிலையில், குடும்ப நல இயக்குநரகத்தின் கீழ் உள்ள அனைத்து மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் விடுப்பை ஜனவரி 31-ம் தேதி வரை ரத்து செய்வதாக உத்திரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இவர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் அடங்குவர். இதுதொடர்பான உத்தரவை உத்திரபிரதேச மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆணையாளர் ராகேஷ் துபே வெளியிட்டுள்ளார். 

முன்னதாக 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜனவரி மாதங்களில் முன்மொழியப்பட்ட கொரோனா தடுப்பூசியைக் கருத்தில் கொண்டு இயக்குநரகம் ஜெனரலின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது அவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்று குடும்ப நலத்துறை மேலும் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்