நாடாளுமன்ற குழு முன் ‘‘பேஸ்புக்’’ நிர்வாகிகள் ஆஜர்

சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன் பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் மற்றும் அந்நிறுவனத்தின் பொதுகொள்கை இயக்குனர் சிவ்நாத் துக்ரல் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Update: 2020-12-16 18:27 GMT
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன்
புதுடெல்லி, 

பேஸ்புக்கில் பயனர்களின் தரவுகளின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளிக்க நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு பேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு இருந்தது.

 அதன்படி காங்கிரஸ் தலைவர் சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு முன்  பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவர் அஜித் மோகன் மற்றும் அந்நிறுவனத்தின் பொதுகொள்கை இயக்குனர் சிவ்நாத் துக்ரல் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

அப்போது இந்தியாவில் தனது ஊழியர்களுக்கும், தொழில் நடவடிக்கைகளுக்கும் ஆபத்து ஏற்படாமல் இருக்கவே பஜ்ரங் தள அமைப்பின் கணக்குகள் மீது பேஸ்புக் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற சமீபத்திய வால் ஸட்ரீட் ஜேர்னல் இதழின் செய்தி குறித்தும், சசிதரூர் மற்றும் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆகியோர் பேஸ்புக் நிறுவன நிர்வாகிகள் இருவரிடமும் கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்