வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதில் மாற்றம் - தேவஸ்தான அதிகாரி தகவல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-20 04:53 GMT
திருமலை,

திருப்பதியில் உள்ள விஷ்ணுநிவாசம் தங்கும் விடுதி, அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் பக்தா்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது ஏழுமலையான் கோவிலில் நடக்க உள்ள வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெளியூர், வெளிமாநில பக்தர்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட மாட்டாது.

ஆகையால் மேற்கண்ட இடங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் மூடப்படும். எனவே 22, 23 மற்றும் 24-ந்தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் நாளைக்குள் பக்தர்களுக்கு வழங்கப்படும். இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதில் ஏற்பட்ட மாற்றத்தை பக்தர்கள் கவனித்து திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை, திருப்பதியைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது. அவர்கள் தங்களின் ஆதார் அட்டையை காண்பித்து இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் ெகாள்ளலாம், என தேவஸ்தான அதிகாரி ஜவஹர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்