ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது ; அமித்ஷா உறுதி

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அமித்ஷா கூறினார்.

Update: 2020-12-20 16:14 GMT
கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் 2–வது நாளாக அமித்ஷா சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். போல்பூர் நகருக்கு சென்ற அமித்ஷா, அங்கு பிரமாண்ட வாகன பேரணி நடத்தினார். திறந்த ஜீப்பில் அவர் ஊர்வலமாக சென்றார். அதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை பார்த்து உற்சாகம் அடைந்த அமித்ஷா, ‘‘என் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்தது இல்லை. முதல்–மந்திரி மம்தா பானர்ஜி மீதான கோபம்தான் இந்த ஆதரவுக்கு காரணம்‘‘ என்று பேசினார்.
ஊர்வலம் முடிந்த பின்னர், அமித்ஷா போல்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் ஜெ.பி.நட்டா வாகன அணிவகுப்பு மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. அவரது பாதுகாப்புக்கு பொறுப்பேற்றிருந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. தனது அதிகாரத்துக்கு உட்பட்டுத்தான் மத்திய அரசு இதை செய்துள்ளது. யாருக்காவது சந்தேகம் இருந்தால், விதிமுறை புத்தகத்தை படித்து பார்க்கட்டும்” என்றார். 

மேலும் செய்திகள்