மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இன்று இலங்கை பயணம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு செல்கிறார்.

Update: 2021-01-05 03:12 GMT
புதுடெல்லி, 

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு செல்கிறார். அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தினே‌‌ஷ் குணவர்த்தனே அழைப்பின் பேரில் அவர் செல்கிறார்.

அங்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியுறவுத்துறை மந்திரி தினே‌‌ஷ் குணவர்த்தனே ஆகியோரை சந்தித்து பேசுகிறார். பரஸ்பர மற்றும் இருதரப்பு நலன்சார்ந்த பிரச்சினைகள் குறித்து அவர் விவாதிக்கிறார்.

1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட மாகாண கவுன்சில் முறையை ஒழிக்க வேண்டும் என்று இலங்கை அரசின் கூட்டணி கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில், ஜெய்சங்கர் அங்கு செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு சரக்கு பெட்டக முனையத்தில் இந்தியாவுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் திட்டத்துக்கு துறைமுக வர்த்தக சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பின்னணியிலும் ஜெய்சங்கர் பயணம் கவனிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்