இந்தியா முழுவதும் 14 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

Update: 2021-01-23 19:25 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ‘கோவேக்சின்’, ‘கோவிஷீல்டு’ என்ற 2 தடுப்பூசிகள் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய இந்த தடுப்பூசி திட்டம் கடந்த ஒரு வாரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நேற்று காலை வரை சுமார் 14 லட்சம் பேருக்கு, அதாவது 13 லட்சத்து 90 ஆயிரத்து 592 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. 

இதில் நேற்று முன்தினம் மட்டுமே 3 லட்சத்து 47 ஆயிரத்து 58 பேர் பயன்பெற்றுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் தினமும் சராசரியாக 2 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மேலும் செய்திகள்