இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடுக்க கோரும் வழக்கில் இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

Update: 2021-01-28 02:19 GMT
திருவனந்தபுரம்,

ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத்  தடை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவை விசாரணை செய்த கேரள உயர்நீதிமன்றம்,  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,   நடிகை  தமன்னா பாட்டியா, அஜு வர்கீஸ் ஆகியோருக்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரளாவில் திருச்சூர் பகுதியை சேர்ந்த பாலி வடக்கன், "ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் மிக அதிகமாக பிரபலமாகி வருகின்றன. இது சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட வேண்டும். மற்ற மாநிலங்களும் இதைச் செய்துள்ளன. கேரளாவில் 1960 ஆம் ஆண்டின் சட்டம் உள்ளது. 

ஆனால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதில் ஆன்லைன் ரம்மி குறித்து எதுவும் கூறவில்லை. பிராண்ட் அம்பாஸிடர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் பார்வையாளர்களை ஈர்த்து போட்டியில் பங்கேற்றக தூண்டுகின்றனர். ஆன்லைன் ரம்மி ஒரு சூதாட்டம் என்பதால் இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தனது மனுவில் கோரியிருந்தார்.  

இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பதிலளிக்குமாறு கோரி கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  

மேலும் செய்திகள்