திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் 20 ஆயிரமாக உயர்வு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டோக்கன் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது.

Update: 2021-01-29 18:58 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தினமும் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் 25 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 10 ஆயிரம் பக்தர்களும், மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் என மொத்தம் 40 ஆயிரம் பக்தர்கள் தினமும் சாமி தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக இலவச தரிசன டோக்கன் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பக்கூடாது என தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. 

அதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்