மராட்டிய கவர்னருக்கு அரசு விமானம் மறுக்கப்பட்டதாக சர்ச்சை: விதி மீறல் இல்லை என்கிறது சிவசேனா

கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு விதிமுறைகளை பின்பற்றி உள்ளது என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.

Update: 2021-02-12 02:47 GMT
மும்பை, 

கவர்னருக்கு விமானம் மறுக்கப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு விதிமுறைகளை பின்பற்றி உள்ளது என்று சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு அரசு விமானத்தில் செல்ல மாநில அரசு மறுத்து உள்ளது. இதையடுத்து அவர் பயணிகள் விமானத்தில் டேராடூனுக்கு சென்றார்.

இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:-

நாங்கள் கவர்னரை மதிக்கிறோம். அரசு விதிகளை பின்பற்றி உள்ளது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுடன் பேசும்போது இது மட்டுமே எனக்கு தொியவந்தது. கவர்னர் தனது சொந்த வேலைகளுக்கு அரசு விமானத்தை பயன்படுத்த விரும்பினால், சில விதிகளை அரசு மீறவேண்டியது இருக்கும். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறையின் நடைமுறைகளை தான் அரசு பின்பற்றி உள்ளது.

விமான விவகாரத்தில் நீங்கள் (கவர்னர்) அவமதிக்கப்பட்டதாக கருதினால், மந்திரி சபையால் பரிந்துரை செய்யப்பட்ட 12 எம்.எல்.சி.களின் நியமனம் விவகார அவமதிப்பை என்ன சொல்வது?"

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்