இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்வு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட உயர்ந்து உள்ளது.

Update: 2021-02-20 04:33 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை சமீப காலங்களாக பெருமளவில் குறைந்துள்ளது.  எனினும், கடந்த 2 நாட்களை விட இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 13,993 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.  இது நேற்று 13,193 ஆகவும், நேற்று முன்தினம் 12,881 ஆகவும் இருந்தது.  கடந்த 2 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து உள்ளது.

நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 9 லட்சத்து 77 ஆயிரத்து 387 ஆக உயர்வடைந்து உள்ளது.  10,307 பேர் (நேற்று 10,896) குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 48 ஆக உயர்வடைந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 101 பேர் கொரோனா பாதிப்புகளுக்கு உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 111ல் இருந்து 1 லட்சத்து 56 ஆயிரத்து 212 ஆக உயர்வடைந்து உள்ளது.  நாடு முழுவதும் 1 லட்சத்து 43 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்து 204 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்