கொரோனா தொற்று அதிகரிப்பு; மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் ஊரடங்கு

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் அமராவதி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-02-21 12:53 GMT
மும்பை,

மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. நேற்று புதிதாக 6 ஆயிரத்து 281 பேர் பாதிக்கப்பட்டனர். மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், இல்லாவிடில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் மராட்டிய முதல்வர் எச்சரிக்கை விடுத்து வருகிறார். 

இந்த நிலையில், கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவதால் மராட்டியத்தின் அமராவதி மாவட்டத்தில் நாளை முதல் ஒருவாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவார ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனவும் மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்