முழு ஊரடங்கு குறித்து வதந்தி பரப்புபவர்கள் கண்காணிப்பு; மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தகவல்

மராட்டியத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர்.

Update: 2021-02-22 23:14 GMT
பொய் செய்திகளை பரப்புபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், "ஊரடங்கு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்றி சிலர் மக்களிடம் பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்களை மாநில இணைய குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன்" என்றார்.

மேலும் செய்திகள்