கொரோனா பெருந்தொற்று: முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் முதியவர்களை சேர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-03-05 01:18 GMT
புதுடெல்லி,

நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு அமலானது.  இதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.  கொரோனா பாதிப்புகள் முதியவர்களை அதிகம் பாதிக்க கூடிய சூழல் நாட்டில் காணப்பட்டன.

கொரோனா பரவல் காலத்தில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு 4ந்தேதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் முதியவர்களை சேர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், இது பற்றி மத்திய மந்திரி அஷ்வனி குமார் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் முன்னுரிமை பெற்று வருகின்றனர்.  இந்த முன்னுரிமையானது தனியார் மருத்துவமனைகளிலும் அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

இதனை விசாரணைக்கு எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில், கொரோனா பெருந்தொற்றை கவனத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளுடன், அனைத்து தனியார் மருத்துவமனைகளும் முதியவர்களை சேர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்