மாலியில் பயங்கரவாத தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழப்பு; இந்தியா கடும் கண்டனம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2021-03-19 16:59 GMT
புதுடெல்லி,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த தாக்குதலில் 20 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 15ந்தேதி மாலியின் காவோ பகுதியில் டெஸ்சிட் என்ற இடத்தில் பாதுகாப்பு நிலை மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், அதனால் 33 வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

இதில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், மக்களுக்கும் மற்றும் மாலி அரசுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.  காயமடைந்த வீரர்கள் அனைவரும் குணமடைய வேண்டி கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்