வங்க தேசம் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விடுத்த அழைப்பை ஏற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்கு 2 நாள் பயணமாக சென்றார்.

Update: 2021-03-27 21:23 GMT
புதுடெல்லி:

வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். 

அந்த அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசம் சென்றார். வங்காளதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  தொடர்ந்து, பிரதமர் மோடி வங்காளதேச  அதிபர் அப்துல் ஹமீதை டாக்காவில் சந்தித்து பேசினார். 

இந்தியா- வங்காள தேச உறவை மேலும் மேம்படுத்த இந்தியாவும் வங்காளதேசமும் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்நிலையில், தனது வங்காள தேச பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு டாக்காவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி டெல்லி வந்தடைந்தார். கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் பயணம் வங்காளதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்