முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-31 09:02 GMT
கோப்புப்படம்
பெங்களூரு, 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் கொரானா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் என பலர் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

இதுதொடர்பாக தேவகவுடா தனது டுவிட்டரில், “என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை சோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கட்சி ஊழியர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்