மம்தா பானர்ஜியின் பாதுகாப்பு அதிகாரி நீக்கம் தேர்தல் கமிஷன் நடவடிக்கை

மம்தாவின் பாதுகாப்பு இயக்குனர் விவேக் சகாய் உள்பட பலரை தேர்தல் கமிஷன் நீக்கியது.

Update: 2021-04-10 00:50 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த மாதம் அங்கு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு கும்பல் அவரை சூழ்ந்து கொண்டு தள்ளியதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற மம்தா, பின்னர் சக்கர நாற்காலியில் சென்று ஓட்டு கேட்டு வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது பாதுகாப்பு பணியில் பல்வேறு அதிகாரிகளை தேர்தல் கமிஷன் நீக்கியது. குறிப்பாக பாதுகாப்பு பணிகளில் அலட்சியமாக இருந்ததாக மம்தாவின் பாதுகாப்பு இயக்குனர் விவேக் சகாய் உள்பட பலரை தேர்தல் கமிஷன் நீக்கியது.

இந்த வரிசையில் மம்தாவின் பாதுகாப்பு குழுவில் இடம்பெற்றிருந்த போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரியான அசோக் சக்கரவர்த்தியை தேர்தல் கமிஷன் நேற்று அதிரடியாக நீக்கி விட்டது.

மேலும் செய்திகள்