இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-19 10:15 GMT
புதுடெல்லி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த ஜனவரி மாதம் இந்தியா வருவதாக இருந்தது. இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால், இங்கிலாந்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால், அவரது வருகை ரத்தானது.

இந்தநிலையில், போரிஸ் ஜான்சன் இந்த மாத (ஏப்ரல்) இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிடப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை 2-வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, அடுத்த வாரம் நடக்கவிருந்த இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் திங்கள்கிழமை ரத்து செய்தார் என்று ஜான்சன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் இந்தியா செல்ல முடியாது" என்று ஜான்சன் அலுவலகம் வெளியிட்ட இங்கிலாந்து மற்றும் இந்திய அரசாங்கத்தின் கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்து பிரதமர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு வரமாட்டார் என்று பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் ஒரு மெய்நிகர் கூட்டத்தை நடத்தவுள்ளனர்  என்று வெளியுறவுத்துறை  ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 


மேலும் செய்திகள்