அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார்.;

Update:2021-04-30 23:13 IST
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் அதிகரித்து காணப்படும் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கென் உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலபேசி வாயிலாக பேசினார்.  

கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா பெருமளவு மருத்துவ உதவி பொருட்களை நேற்று வழங்கியிருந்த நிலையில் , இருநாட்டு வெளியுறவு மந்திரிகளும் இன்று உரையாடியுள்ளனர். 

 அதேபோல், சீன வெளியுறவுத்துறை மந்திரியுடனும் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக உரையாடினார். 

மேலும் செய்திகள்