மராட்டியத்தின் புனே நகரில் வாரஇறுதி ஊரடங்கு அமல்: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்

மராட்டியத்தின் புனே நகரில் மருந்து கடைகள் தவிர பிற நடவடிக்கைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-05-08 07:10 GMT
புனே,

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மராட்டியம் உள்ளது.

மராட்டியத்தில் நேற்றைய நிலவரப்படி, ஒரே நாளில் 54,022 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  898 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.  இவற்றில், மும்பை பெருநகரில் 3,039 பேருக்கு பாதிப்புகளும், 71 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதுதவிர, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா தொற்றுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.  இதனை முன்னிட்டு புனே நகரில் வாரஇறுதி நாட்களில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு போலீசாரால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, அத்தியாவசிய தேவையான மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  மற்ற செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  இதனால் பல்வேறு கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளன.  சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் செய்திகள்