இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

இலவச கொரோனா தடுப்பூசிக்காக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-02 15:35 GMT
புதுடெல்லி,

இலவச கொரோனா தடுப்பூசி கோரி மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-  

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிதான் வலுவான பாதுகாப்பு கவசமாக உள்ளது. நீங்கள் அனைவரும் இலவச கொரோனா தடுப்பூசிக்காக குரல் எழுப்பி  மத்திய அரசை எழுப்ப வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையங்களில் ஒன்றாக நாம் உள்ளோம். இருந்தாலும் 3.4 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தில் ஏற்படுள்ள இந்த குழப்பத்திற்கு யார் பொறுப்பு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்