நூர்ஜஹான் மாம்பழம் ஒன்றின் விலை ரூ.1000

ஆப்கானிய வம்சாவளியைச் சேர்ந்தவை மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் மாம்பழம் ஒன்றின் விலை ரூ.500 இல் இருந்து ரூ.1000 வரை விற்பனையாகிறது.

Update: 2021-06-07 08:08 GMT
போபால்

மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் 'நூர்ஜஹான்'  மாம்பழம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு  நல்ல மகசூல் மற்றும்  அதிக விலை கிடைக்கிறது.

இந்த பருவத்தில் 'நூர்ஜஹான்' மாம்பழத்தின் விலைரூ.500 முதல் ரூ. 1,000 வரை இருக்கும்., கடந்த ஆண்டைப் போலல்லாமல், சாதகமான வானிலை காரணமாக இந்த வகை மாம்பழங்களின் விளைச்சல் இந்த முறை நன்றாக உள்ளது என்று ஒரு விவசாயி தெரிவித்து உள்ளார்.

'நூர்ஜஹான்' மாம்பழங்கள் ஆப்கானிய வம்சாவளியைச் சேர்ந்தவை என்றும், குஜராத் எல்லையை ஒட்டியுள்ள இந்தூரில் இருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில்  அலிராஜ்பூர் மாவட்டத்தின் கட்டிவாடா பகுதியில் மட்டுமே பயிரிடப்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறி உள்ளனர்.

கதிவாடாவைச் சேர்ந்த மாம்பழ பயிரிடுபவர் சிவ்ராஜ் சிங் ஜாதவ் கூறும் போது 

எனது பழத்தோட்டத்தில் உள்ள மூன்று நூஜாஹான் மா மரங்கள் 250 மாம்பழங்களை உற்பத்தி செய்துள்ளன. பழத்தின் விலை ஒன்றுக்கு ரூ. 500 முதல்ரூ. 1,000 வரை உள்ளது. இந்த மாம்பழங்களுக்கு முன்பதிவு ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை ஒரு நூர்ஜஹான் மாம்பழத்தின் எடை 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்கும்.  

'நூர்ஜஹான்' மாம்பழங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்களில் மத்தியப் பிரதேசம் மற்றும் அண்டை நாடான குஜராத்தைச் சேர்ந்த மாம்பழ பிரியர்கள் ஆவார்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்