டெல்லியில் 9, 11 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9, 11 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-10 13:18 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையில் மக்கள் அதிகளவில் பாதிப்படைந்து உள்ளனர்.  இதனை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி உள்ளன.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என மத்திய அரசு அறிவித்தது.  மாணவ மாணவியரின் நலனை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும், 12ம் வகுப்பு வாரிய தேர்வுகளை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிட்டன. 

அந்த வகையில் டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

இடைக்கால தேர்வுகள் நடத்தாத பள்ளிகள், மாணவர்களின் சிறந்த 2 பாடங்களின் அடிப்படையில் தேர்வு முடிவுகளைத் தயாரிக்க வேண்டும்.

 டெல்லி அரசுப் பள்ளிகள் 9 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை கல்வி இயக்குநரகம் ஜூன் 22 ஆம் தேதி அறிவிக்கும்.

இடைக்கால தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்