ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்: கொரோனாகால நிதி அறிவிப்பு

ராஜஸ்தானில் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு முதல் மந்திரி தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

Update: 2021-06-10 19:57 GMT


ஜெய்ப்பூர்,

நாட்டில் கொரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.  இந்நிலையில், கடந்த 7ந்தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி, காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.  அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாலை 4 மணிவரை ஒவ்வொரு நாளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும்.

எனினும், வார இறுதி நாட்களான வெள்ளி கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்நிலையில், முதல் மந்திரி அசோக் கெலாட் 2 ஆயிரம் கலைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் கொரோனா நிதியுதவி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  அரசின் இந்த முடிவால், நிதி நெருக்கடியில் உள்ள மற்றும் தேவையாக உள்ள கலைஞர்கள் நிவாரணம் பெறுவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்