தெலுங்கானாவில் புதிதாக 1280 பேருக்கு கொரோனா: 15 பேர் பலி
தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 1,280 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,03,369 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது 21,137 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,261 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,78,748-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,484 -ஆக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.