ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கொச்சி செல்கிறார்

கொச்சி கடற்படை தளத்தில் 25-ந்தேதி விமானம் தாங்கி கப்பலை, ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் பார்வையிடுகிறார்.;

Update:2021-06-23 11:52 IST
கொச்சி, 

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. 

இங்கு இந்திய கடற்படைக்காக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், 2 நாட்கள் அவர் சுற்றுப்பயணமாக கொச்சி வருகிறார். நாளையும் (24-ந்தேதி), நாளை மறுதினமும் (25-ந்தேதி) அவர் கப்பல் பணிகளை ஆய்வு செய்கிறார்.

மேலும் செய்திகள்