ஆந்திராவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்

ஆந்திராவில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2021-07-01 10:54 GMT
சென்னை,

ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மந்திரி நானி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்க, அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தால் ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் உயரும். 

விஜயநகரத்தில் பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றவும் டிட்கோ சார்பில் 2.62 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு பங்கீடு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி ஆந்திரா முழுவதும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் எனவும், ஏழை மக்களுக்கு 2 லட்சத்து 62 ஆயிரம் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்