சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகம் சேர்ப்பு
சிறு, குறு, நடுத்தர தொழில்துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.;
புதுடெல்லி,
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலில் மொத்த, சில்லரை வர்த்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை மந்திரி நிதின் கட்காரி தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரம்புக்குள் சேர்க்கப்படாமல் மொத்த, சில்லரை வர்த்தகங்கள் விடுபட்டு இருந்தன. இந்தநிலையில், திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மொத்த, சில்லரை வர்த்தகங்களையும் இந்த பட்டியலில் சேர்க்க சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப மொத்த, சில்லரை வர்த்தகங்களுக்கு முன்னுரிமை துறைக்கான பலன்கள் கிடைக்கும். அந்த வர்த்தகர்கள் 2½ கோடிபேர் பலனடைவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிறு, குறு நடுத்தர தொழில்துறையின் கீழ் சில்லரை, மொத்த விற்பனை வணிகள் பதிவு செய்து கொள்ளலாம். திருத்தப்பட்ட விதிகளின்படி Udaym Registration portal -ல் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.