ஆந்திராவில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு நேர தளர்வு - ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஆந்திராவில் 11 மாவட்டங்களில் ஊரடங்கு நேரம் தளர்த்தப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.;

Update:2021-07-05 18:56 IST
அமராவதி,

ஆந்திர மாநிலத்தில் வருகிற ஜூலை 8 முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி தவிர இதர 11 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்பட்ட சேவைகள் செயல்படும், எனினும் கடைகளை இரவு 9 மணிக்குள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்கள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்வுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நேர்மறை விகிதம் 5 சதவீதமாகக் குறையும் வரை கட்டுப்பாடுகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்