நமது கார் பெட்ரோல், டீசலில் ஓடலாம், வரி கொள்ளையில் ஓடுகிறது, மோடி அரசு ராகுல் காந்தி விமர்சனம்
டெல்லியில் முதல் முறையாக 100 ரூபாயை கடந்தது.;
புதுடெல்லி,
மற்ற பெருநகரங்களில் பெட்ரோல் விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டியநிலையில், நேற்று டெல்லியில் முதல் முறையாக 100 ரூபாயை கடந்தது. இதையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசை விமர்சித்து தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், ‘‘நமது கார் பெட்ரோல் அல்லது டீசலில் ஓடலாம். ஆனால், மோடி அரசு வரி கொள்ளையில் ஓடுகிறது’’ என்று அவர் கூறியுள்ளார்.