உன்னாவ் வழக்கு..பாஜக முன்னாள் எம்.எல்.ஏ செங்கரின் தண்டனை நிறுத்திவைப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

செங்கரை ஜாமீனில் விடுவிக்க டெல்லி ஐகோர்ட்டு கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.;

Update:2025-12-29 15:10 IST

புதுடெல்லி,

.கடந்த 2017-ஆம் ஆண்டு, உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் ஒருவரை (அப்போது அவருக்கு 17 வயது)  கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

டிசம்பா் 2019-இல் விசாரணை நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிரான செங்கார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு கடந்த செவ்வாய்க்கிழமை, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் தரப்பிலும், சிபிஐ தரப்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றவாளி ஒரு தனி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டிருக்கும் இந்த அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 23 தேதியிட்ட டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு நாங்கள் தடை விதிக்கிறோம். எனவே, அந்த உத்தரவின்படி செங்கார் விடுவிக்கப்பட மாட்டார்’ என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்