பெகாசஸ் விவகாரத்தில் தன்னிச்சையான விசாரணை அவசியம்: சசிதரூர் வலியுறுத்தல்

இஸ்ரேல் உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் மந்திரிகள், நீதிபதி, தொழிலதிபர்கள் உள்பட 300 பேரின் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2021-07-19 18:54 GMT
புதுடெல்லி,

இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற உளவு நிறுவனம் மூலம் மத்திய அரசு 2 மத்திய மந்திரிகள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், 40 பத்திரிகையாளர்கள், நீதிபதி, தொழில் அதிபர்கள், சமூக ஆா்வலர்கள் என சுமார் 300 செல்போன் உரையாடல்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்து உள்ளது. குறிப்பிட்ட யாரையும் உளவு பார்க்கவில்லை, அவர்களின் செல்போனும் ஒட்டுக்கேட்கப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இதேபோல உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த அடிப்படையான வலுவான ஆதாரங்கள் இல்லை எனவும் கூறியுள்ளது.

இந்தநிலையில், பெகாசஸ் விவகாரத்தில் சுதந்திரமான அவசியம் தவிர்க்க முடியாதது என்று பாராளுமன்ற தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான நிலைக்குழு தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ தற்போது கேள்வி என்னவெனில், உளவு பார்த்தது யார்? இந்திய அரசு இதை செய்தால் அது மிகவும் மோசமான விஷயம் ஆகும்.  

ஆனால், அரசால் அங்கீரிக்கப்படாத வேறு யாரும் இதை செய்தார்கள் என்றால், அது அதைவிட மோசமானதாகும்.  சீனாவோ பாகிஸ்தானோ நமது மக்களை உளவு பார்த்ததாக வெளிநாட்டு அரசாங்கம் கூறுமேயானால், இவ்விவகாரம் குறித்து நமது அரசு விசாரணை நடத்த வேண்டும் என்ற தேவை எழும். இதன் காரணமாகவே நான், இவ்விவகார்த்தில் தன்னிச்சையான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தி வருகிறேன்” என்றார். 

மேலும் செய்திகள்