பஞ்சாப்பில் ஜூலை 26ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு

பஞ்சாப்பில் ஜூலை 26ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

Update: 2021-07-20 12:56 GMT
பஞ்சாப்,

பஞ்சாப்பில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்-லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில்,தற்போது மாநிலத்தில் உள்ள பள்ளிகளை ஜூலை 26ஆம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 10 முதல் 12ஆம் வரை மாணவர்கள் தடுப்பூசி செலுத்திய பின்பு தான் பள்ளிக்கு வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் தளர்வாக, உள்ளரங்கில் 150 பேரும், வெளியரங்கில் 300 பேருடனும் 50 சதவீத இருக்கைகளுடன் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் செய்திகள்