ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு பதவி விலகப்போவதாக பி.எஸ்.எடியூரப்பா சூசக அறிவிப்பு

ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு பதவி விலகப்போவதாக கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா சூசகமாக தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-22 08:34 GMT
கோப்புப்படம்
பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் கட்சிக்கு அவமரியாதை மற்றும் சங்கடத்தை ஏற்படுத்து விதமான எந்தவித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என்று அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து மடாதிபதிகள், பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சோந்த எம்.பி.பாட்டீல், ஷாம்னூா் சிவசங்கரப்பா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில் ஜூலை 26-ம் தேதிக்குப் பிறகு பதவி விலகப்போவதாக கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா சூசகமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஜூலை 26-ம் தேதியுடன் கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன்பிறகு என்ன முடிவு என்பதை ஜே.பி.நட்டா முடிவு செய்வார். அதனை நான் பின்பற்றுவேன். பாஜகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரச் செய்வதே எனது பணி. இதில் எந்த மாற்றமும் இல்லை. கட்சித் தொண்டர்கள், மடாதிபதிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்