பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து , முதல் மந்திரி அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தார்.

Update: 2021-07-23 06:59 GMT
அமிர்தசரஸ்,

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து , முதல் மந்திரிஅமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இருவருக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த சூழலில், இன்று காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிலையில்  அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்துவும் இந்த நிகழ்வில் பங்கேற்று,  அமரீந்தர் சிங்குடன்ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்விற்கு பிறகு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிகழ்வில் முதல் மந்திரி  உள்பட அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பஞ்சாப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதை நீங்கள் பார்த்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்