இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

Update: 2021-07-25 13:57 GMT
கோப்புப்படம்
சிம்லா,

இமச்சால பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இந்த நிலச்சரிவு வீடியோ சமூக வலைதளங்களில்வைரலாகியது. அந்த வீடியோவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு உடைத்து கீழே பள்ளத்தாக்கில் விழுகிறது. இதில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமாகிறது. சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் மாவட்ட எஸ்பி சஜு ராம் ராணா தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில் இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன்” என்று அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்