நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை தகர்த்த எதிர்க்கட்சிகள்: பா.ஜனதா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை எதிர்க்கட்சிகள் தகர்த்து விட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2021-07-29 00:03 GMT
அனுராக் தாக்குர்
‘பெகாசஸ்’ உளவு விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று காகிதத்தை கிழித்து சபாநாயகரை நோக்கி வீசும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. ஒரு எம்.பி., பதாகையையும் தூக்கி வீசினார். எதிர்க்கட்சிகளின் செயலுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. 

அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான அனுராக் தாக்குர் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விவாதிக்க விரும்பாதது ஏன்?
எதிர்ப்பு தெரிவிப்பதற்கென பல வழிமுறைகள் உள்ளன. ஆனால், ஜனநாயக ஆலயமான நமது நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் எதிர்க்கட்சிகள் தகர்த்து விட்டன.தங்களது கண்டனத்துக்குரிய செயல்களால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு வெட்கக்கேட்டை உண்டாக்கி விட்டனர். அவர்கள் விவாதத்துக்கு பயந்து ஓடுகிறார்கள். சபையில் ஏன் விவாதம் நடத்த விரும்பவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்