பீகாரில் மணல் திருட்டை தடுக்க தவறிய போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிடை நீக்கம்
பீகார் மாநிலத்தில் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு கடந்த மே மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.;
பாட்னா,
பீகார் மாநிலத்தில் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு கடந்த மே மாதம் முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அங்குள்ள சோனே ஆற்றங்கரை பகுதியில் தடையை மீறி மணல் திருடப்பட்டது. இதுதொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அரசுக்கு அறிக்கை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, மணல் அள்ளியதை தடுக்கத் தவறியதாக அவுரங்காபாத், போஜ்பூர் மாவட்ட எஸ்.பி.கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும் 5 டி.எஸ்.பி.கள், ஒரு மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர், 3 அரசு அதிகாரிகள், சுரங்கத் துறை அதிகாரிகள் 6 பேர் என மொத்தம் 17 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.