இந்திய துறைமுகங்கள் மசோதா-2021 ஆலோசனையில் உள்ளது - மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல்

இந்திய துறைமுகங்கள் மசோதா-2021 ஆலோசனை கட்டத்தில் இருப்பதாக மக்களவையில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-29 12:34 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்கட்சிகள் நடத்தும் தொடர் அமளிக்கு இடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்புடன் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று நாடாளுமன்ற மக்களவையில், மத்திய அரசு அறிவித்திருந்த இந்திய துறைமுகங்கள் மசோதா-2021, குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்திய துறைமுகங்கள் மசோதா-2021 தற்போது ஆலோசனை கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து மாநில அரசுகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதில் சிலர் கருத்துக்களை பதிவு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா-2020 ல் உள்ள கருத்துகள் மற்றும் பரிந்துரைகள், மசோதா-2021 இல் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்