தெலுங்கானாவில் கார் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி
தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் விவசாய கிணற்றில் நேற்று கார் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;
கரீம்நகர்,
தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் விவசாய கிணற்றில் நேற்று கார் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் இருந்து உஸ்னாபாத் நோக்கி கார் ஒன்று நேற்று காலை வேகமாக சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் சிகுரு மாமிடி மண்டலம், சின்ன முல்கனூரு என்ற இடத்தில் ஒரு வளையில் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள ஆழமான விவசாய கிணற்றில் பாய்ந்தது. அப்போது காரில் இருந்தவர்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக கிணற்றில் மூழ்கியது.
தகவல் அறிந்து கரீம்நகர் தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு கார் மீட்கப்பட்டது. எனிலும் காரில் யாரும் இல்லை.
காரில் 5 பேர் இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கரீம்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.