கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு நெருக்கடியான சூழலில் வருபவர்களை அனுமதிக்க கேரள ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவு

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு நெருக்கடியான சூழலில் வருபவர்களை அனுமதிக்கும்படி கேரள ஐகோர்ட்டு இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

Update: 2021-08-18 00:29 GMT


கொச்சி,

கேரளாவில் கொரோனா 2வது அலையின் தீவிரம் குறையாமல் அதிகரித்து வரும் சூழலில், கடந்த 24 மணிநேரத்தில் 21,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

கேரளாவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கேரள மக்கள் கர்நாடகாவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து உள்ளது.  இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டு பிறப்பித்து உள்ள உத்தரவில், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட நெருக்கடியான சூழலில் வருபவர்களை அனுமதிக்கும்படி இடைக்கால உத்தரவிட்டு உள்ளது.

அவர்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது, எந்த வாகனம் என்று கவனத்தில் கொள்ளாமல் அவர்கள் கர்நாடகாவுக்குள் நுழைவதற்கு  அனுமதி அளிக்கும்படியும் உத்தரவில் தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்